செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அதற்கான இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டான அமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை மண்ணிவாக்கம் வரையிலும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரையிலும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரையிலும் சாலைகளை அகலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.