92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர் மே 8 ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும் இன்று (மே 16ஆம் தேதி) மாலைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றிவிட்டு 200 கட்டணம் செலுத்த வேண்டும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.