பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் ‘நமஸ்தே வேர்ல்ட் சேல்’ என்ற பெயரில் விமான டிக்கெட்டுகளில் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் பிப்ரவரி 5ம் தேதி இரவு வரை இந்த விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. உள்நாட்டுப் பயணத்திற்கு, எகானமி வகுப்பு டிக்கெட் விலை ரூ.1,799 முதல், வணிக வகுப்பு விலை ரூ.10,899 முதல் தொடங்குகிறது. ஏர் இந்தியாவின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.