
இந்தியாவில் சுற்றுலா பயணமாக வந்த தென் கொரிய யூட்யூபர் ஒருவர், ஒரு இந்திய கடைக்காரரை தவறாக குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தென்கொரிய மொழியில் முழுமையாக பேசிய அந்த யூட்யூபர், “ஏய், என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறீங்க… உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார். இந்தக் காட்சியை பதிவு செய்தபோது, அந்தக் கடைக்காரர் தனது மொழியைப் புரிந்துகொள்ள மாட்டார் என்று நம்பியிருந்தார்.
ஆனால் எதிர்பாராத வகையில், அந்த இந்தியர் கொரிய மொழியிலேயே பதிலளித்து, “நான் இங்க வேலை செய்கிறேன்” எனக் கூறினார். இதைக் கேட்ட யூட்யூபர் அதிர்ச்சியில் “நீங்க கொரிய மொழி பேசுறீங்க!” என கேட்டார். அந்த இந்தியர் முன்பு கொரியாவில் ஒரு கடையில் வேலை செய்த அனுபவம் மூலம் அந்த மொழியை கற்றுக் கொண்டதாகவும் விளக்கினார். இதை உணர்ந்த யூட்யூபர், தவறாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் “இந்தியா தொடக்க நிலைக்காரர்களுக்கான நாடல்ல” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுகளை பெற்றுவருகிறது.
View this post on Instagram