ஏப்ரல் 1 முதல் ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 இன் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த காலக்கெடு முடிவடைவதால் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் என்று தெரிகிறது.