இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய நிதியாண்டு முதல் காப்பீட்டு பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுள், உடல்நலம் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்ட அனைத்து காப்பீட்டு பாலிசிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும், ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இ-இன்சூரன்ஸ் பாலிசி நிர்வாகத்தை மிகவும் வசதியாக மாற்றும் என்று IRDAI நம்புகிறது.