மங்களூரு கைகம்ப் பகுதியில் சந்திப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2  வயது ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் குடும்ப தவறாக காரணமாக சந்திப் தனது இரண்டு வயது குழந்தையுடன் குருபரா பாலத்திற்கு அருகே வந்தார். பின்னர் பாலத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அவரை கீழே இறங்குமாறு கூறினார். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்தார்.

இதற்கிடையே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வர செய்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.