திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிகவினரின் நலன் மற்றும் கூட்டணியின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே இந்தத் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக அரசியல் பாதுகாப்புதான் எங்களின் முதன்மையான இலக்கு,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வலதுசாரி மற்றும் சாதிய இயக்கங்கள் தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும், மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார். தொகுதி எண்ணிக்கையை விட, தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி முக்கியம் என்பதில் விசிக உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், திமுக கூட்டணியுடனான பயணம் தொடர்ந்து நீடிக்கும் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
