இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் டெபிட் கார்டுகளை வாங்குகிறார்கள். இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டாம். ஆனால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அது உங்களுக்கு தான் ஆபத்து. அதாவது ஏடிஎம்மில் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் போது பரிவர்த்தனை முடிவடைந்த உடன் கேன்சர் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வேறு யாரும் மோசடி செய்து உங்களின் பணத்தை எடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த பிறகு கேன்சல் பட்டனை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் உங்கள் டெபிட் கார்டின் பின் நம்பரை கார்டில் எழுதக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் போதெல்லாம் உங்கள் பின் நம்பரை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் செயல்முறை முடிந்ததும் ஏடிஎம் இயந்திரம் மூலம் தகவல் நீக்கப்படும். அப்போது பரிவர்த்தனை முடிந்ததும் முகப்பு திரை தெரியும் என்றால் நீங்கள் ரத்து செய்யும் பட்டனை அழுத்த வேண்டாம். இருந்தாலும் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுத்த பிறகு பரிவர்த்தனையை தொடர சொன்னால் கண்டிப்பாக அதனை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் பணம் திருடப்பட்டு விடும்.