ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன் காப்பீட்டுத் திட்டம் (EDLI) போன்றவற்றால் நிர்வகிக்கப்படும். இந்த 3 திட்டங்களும் உறுப்பினர்களின் தேவைகளை முழுமையாக அளிக்கிறது. தற்போது 6 EPF க்ளைம் படிவங்கள் குறித்து நாம் இப்பதிவில் காண்போம்.

# படிவம் 10C: EPS திட்டத்தில் உங்களது முதலாளியின் பங்களிப்பில் இருந்து பணத்தை எடுப்பதற்கு இப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.

# படிவம் 10D: மாதாந்திர ஓய்வூதியத்தை பெற இப்படிவத்தை பயன்படுத்தலாம்.

#படிவம் 31: இப்படிவம் உங்களது EPF கணக்கில் இருந்து கடன்கள் மற்றும் திரும்ப பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

# படிவம் 13: இப்படிவம் உங்களது நிதியை ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்ற அனுமதிக்கிறது. உங்களது நிதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளதை உறுதிசெய்கிறது.

#படிவம் 20: இப்படிவத்தை பயன்படுத்துவதன் வாயிலாக உங்களது குடும்ப உறுப்பினர் (அ) நாமினி ஒரு ஊழியர் இறந்தால் PF நிதியை பெறலாம் மற்றும் தங்கள் வேலை 10 வருடங்களுக்கும் குறைவாக இருந்தாலும் இது பொருந்தும்.

# படிவம் 51F: பணியாளர்களின் வைப்புத் தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் காப்பீட்டு பலன்களைப் பெற, உங்களது நாமினியால் படிவம் 51F-ஐப் பயன்படுத்தலாம்.