இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ திட்டம் மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஹுக்ளி ஆற்றின் அடியில் முதன் முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 33 மீட்டர் அடியில் அமைந்த இந்தியாவின் ஆழம் வாய்ந்த மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெருமையை பெறுகின்றது. மேலும் ஆற்றுக்கு அடியில் 16 கிலோமீட்டர் தொலைவிலான ஹவுரா மைதான் வரையிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த மெட்ரோ ரயில் விரைவில் செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.