பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், ஏசி ரயிலில் பயணம் செய்வதற்காக ₹550 செலவழித்து டிக்கெட் எடுத்தும், அங்கு நிலவிய மோசமான சுகாதார நிலையைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ரயிலின் உள்பகுதி மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும், குறிப்பாக கழிப்பறைகள் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வசதியான மற்றும் சுகாதாரமான பயணத்திற்காக கூடுதல் பணம் செலுத்தி ஏசி வகுப்பில் டிக்கெட் எடுத்தும், அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்தப் பயணி இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்திய ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “நாங்கள் செலுத்தும் பணத்திற்கு இதுதான் மதிப்பா?” என்று அந்தப் பயணி வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.