இந்தியாவில் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் சில இடங்களில் தூய்மை என்பது இருப்பதில்லை. பலர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று விரும்பினாலும் சிலர் அதனை பெரிதாக கண்டு கொள்வது கிடையாது.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த 82 வயது முதியவர் சூரிய நாராயணன். இவர் தன்னுடைய பகுதியில் சுற்றுப்புற சூழல் ‌ தூய்மையற்று  இருந்ததால் வேதனை அடைந்தார். இதன் காரணமாக வீதியில் இறங்கி அவர்  தூய்மை பணியில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.