பெங்களூரு மடநாயக்கனஹள்ளியில் பட்டப்பகலில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த ஊரையே அதிர வைத்துள்ளது. ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் வந்த ஒரு மர்ம நபர், திடீரென ஒரு இளம் பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்த ஒரு தாக்குதலில் யாரும் உதவிக்கு வராமல் ஒரு உயிர் போனது நினைவிருக்கலாம். ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த ஒரு சிறுவன் மின்னல் வேகத்தில் வந்து அந்தத் தாக்குதல்காரனைப் பின்னாலிருந்து பாய்ந்து தாக்கினான்.
Madanayakanahalli: A masked man on a scooty pulled a knife on a young girl.
It reminded everyone of that tragic roadside attack a few years ago where no one stepped forward and we lost a precious life. But not today.
A fearless boy attacked the attacker from behind.… pic.twitter.com/8YwgWpyJRU
— Rakesh Kalotra (@Rakeshkalotra9) May 8, 2026
சிறுவன் காட்டிய அந்த ஒற்றைத் துணிச்சல், அங்கிருந்த பொதுமக்களுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. உடனே அங்கிருந்த சகோதரர்களும், பெரியவர்களும், அவ்வழியே சென்றவர்களும் ஒரு கேடயம் போல அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு, அந்த ‘ராட்சசனை’ மடக்கிப் பிடித்தனர். அந்த இடத்திலேயே அவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். “உண்மையான ஹீரோக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், மனிதநேயத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
