வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு இருந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கவுன்சிலர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் கவுன்சிலர் தனது கணவர் யுவராஜுடன் சேர்ந்து தனது வார்டில் இருந்து குப்பைகளை சேகரித்துள்ளார்.

பின்னர் அதனை வாராஜா பேட்டை நகராட்சி அலுவலக வாசலில் கொட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.