
மதுரை மாவட்டம் முத்துப்பட்டி 73வது வார்டு பகுதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஒன்றை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு திமுகவின் ஆட்சி இருக்கின்றது. 200 சீட் 200 சீட் என கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தது போன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகின்றார். திமுக தொடர்ந்து ஊடக பெருமக்களை பயமுறுத்தி வருகின்றது.
இன்னைக்கு கஞ்சா கடத்துபவன், மக்களை ஏமாற்றக்கூடியவன் எல்லோரும் திமுக கொடியை பயன்படுத்தி வருகின்றார்கள். இன்னைக்கு எழுதி வச்சுக்கோங்க அதிமுக ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் மலரும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு திமுக ஆட்சிக்கு வந்ததும் மதக் கலவரம் மற்றும் ஜாதி கலவரம் என மாறிவிட்டது. இன்னைக்கு எழுதி வச்சுக்கோங்க. அதிமுக ஆட்சி 2026 ஆம் ஆண்டு மலரும். அப்போது ஐந்து வயது சிறுமியிலிருந்து மூதாட்டி வரை யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள். பாலியல் வன்கொடுமை என்பது அறவே இருக்காது என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.