எழுதாத பேனாவிற்கு 380 கோடி செலவு செய்வது நியாயம்தானா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் பிராச்சாரத்தில் ஈடுபட்ட அவர், 80 கோடியில் நினைவுச் சின்னம் வைப்பதற்கு பதில் 2 கோடிக்கு வைக்கலாமே? என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவினர் வீடுவீடாக சென்று 1000 பணம் கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஓட்டு அதிமுகவுக்கு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.