சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை விரட்டி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக கொடி பொருந்திய காரில் சென்றதால் திமுக காரர்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இப்படியான நிலையில் பெண்களை காரில் வழிமறித்து மிரட்டியவர்கள் அதிமுக பின்புலம் கொண்டவர்கள் என்ற விசாரணையில் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முகத்தை எங்கு வைத்துக் கொள்வார் என்று திமுக அமைச்சர் ரகுபதி தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என தெரிய வரும்.

திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் தற்போது தங்களுடைய முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள். வீர வசனம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது எங்களிடம் மன்னிப்பு கேட்பாரா. திமுக கொடியை காட்டி திமுக மீது பொய்யான வீண்பழி சுமத்தி அதன் மூலமாக சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகின்றது என ரகுபதி ஆவேசமாக பேசி உள்ளார்.