அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. தீர்மானிக்கும். ஆனால், அ.தி.மு.க. என்ஜின் இல்லாத கார் போல இருக்கும்போது, அதை பா.ஜ.க. இழுக்க முயற்சிக்கிறது” என்று உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும், உதயநிதி ஸ்டாலின் வரம்பை மீறி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

“தமிழக இளைஞர்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வையும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் பற்றிய விமர்சனத்தில் ஈடுபட்டு இருப்பது பொதுமக்களுக்கு புரிந்துவிடும்” என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வராக அமருவார் என்றும், அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த விமர்சனத்தையும் எதிர்கொண்டு, சோர்வடையாமல், எப்போதும் தம்முடைய நிலையை காக்கும் என்றார்.