நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் எல்லைகளில் உயிருக்குத் துணிந்து போராடுகிறார்கள், ஆனால் சொந்த வீட்டிலேயே அவர்களுக்கு ஒரு பேராசை பிடித்த பெண்ணால் ஆபத்து வரும் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. திருமணமான முதல் இரவிலேயே, தன் கணவனிடம் அன்பாகப் பேசுவதற்குப் பதிலாக, அவரது சொத்துக்கள் எங்கே இருக்கின்றன, எவ்வளவு பணம் இருக்கிறது என்று அந்தப் பெண் விசாரிக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் அவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் முகத்திலடித்தாற்போலக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

​பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் பேசும் வீடியோவில், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே வேறொருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கும், சொகுசாக வாழ்வதற்கும் பணம் தேவைப்பட்டதால் மட்டுமே, திட்டமிட்டு இந்த ராணுவ வீரரைத் திருமணம் செய்துள்ளார். ஒரு வீரனின் நேர்மையான அன்பை விட, அவனது பணமே முக்கியம் என நினைத்த அந்தப் பெண்ணின் குணம் ஒட்டுமொத்த இணையதளத்தையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. “ஏன் சில பெண்கள் இவ்வளவு பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்?” என்ற வேதனையான கேள்வியுடன் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.