கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தைப் பயணிகளுக்கான மினி நூலகமாக மாற்றியுள்ள நெகிழ்ச்சியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் டேனியல் மார்டோனா என்பவரின் இந்த நூதன முயற்சியில், ஆட்டோவின் உட்புறத்தில் பல்வேறு வகை புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது செல்போன்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் அழகான புத்தகக் குறியீடுகளையும் அவர் வழங்கி வருகிறார்.
View this post on Instagram
“>
இந்த ஆட்டோவின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த முயற்சியைக் கண்ட இணையவாசிகள் ஆட்டோ ஓட்டுநரின் சமூக அக்கறையைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் “இந்த ஆட்டோ பெட்ரோல் அல்லது டீசலில் ஓடவில்லை, மனிதநேயத்தால் ஓடுகிறது” என்று பயனர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். சாதாரண பயணத்தை ஒரு அறிவார்ந்த அனுபவமாக மாற்றிய இந்த மைசூரு ஆட்டோ ஓட்டுநரின் செயல் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
