நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் இடையே நடந்த வார்த்தை போர் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சான்ட்னர், “அகமதாபாத் மைதானத்தில் திரளும் ஒரு லட்சத்திற்கும் மேலான இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே (Silence the crowd) எங்கள் இலக்கு” என ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பாணியில் சவால் விடுத்தார்.

இதற்கு தனது பாணியில் கூலாக பதிலளித்த சூர்யா, “அரே.. எல்லாரும் ஏன் இதே டயலாக்கை திரும்பத் திரும்ப சொல்றீங்க? புதுசா எதாவது முயற்சி செய்யுங்க” என கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் தோற்ற வலியை ரசிகர்கள் இன்னும் மறக்காத நிலையில், தற்போது இந்திய வீரர்கள் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டிரெஸ்ஸிங் ரூமில் தற்போது மிகவும் பாசிட்டிவான சூழல் நிலவுவதாகவும், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்திய அணி தயாராக இருப்பதாகவும் சூர்யா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.