பீகார் மாநிலம் பாங்கா பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில், திருமணத்திற்கு பின் பக்கத்து வீட்டு இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று, கணவர் கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் கள்ளக்காதலன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென வீடு திரும்பிய கணவர், இருவரையும் நெருக்கமான நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்துக் கேட்ட கணவரை, கள்ளக்காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது ஏற்கவோ கள்ளக்காதலன் அப்பட்டமாக மறுத்துவிட்டான்.
தான் உயிருக்கு உயிராக நம்பிய கள்ளக்காதலன் கைவிட்டதாலும், ஊர் முன்னால் ஏற்பட்ட அவமானத்தாலும் மனமுடைந்த அந்தப் பெண், அன்று இரவே விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
