மகாராஷ்டிராவின் லாதூர் மாவட்டத்தில் பலத்த மழையால் தங்கள் வயல்வெளியில் பயிர்கள் அழிந்ததையடுத்து, தன் நிலத்தில் நின்று கண்ணீர் விட்ட ஒரு வயதான விவசாயியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த விவசாயி, கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் தன் நிலத்தில் தண்ணீர் புகுந்து எல்லா பயிர்களும் அழிந்துவிட்டதாக கூறி, “என் நிலம் போச்சு, எல்லாம் நாசமாகிவிட்டது. என்ன செய்யறது? கொஞ்சம் இருந்ததுவும் போச்சு… பசங்களை எப்படி வாழ வைப்பேன்? நான் உயிரோட இருக்க தேவையில்ல. எனக்கு மரணம்தான் வேண்டும்” என கதறியபடி அழுகிறார்.
பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் ஒடிந்து போனதை பார்த்த விவசாயி, தாழ்வான நிலத்தில் நிறைந்து கிடக்கும் தண்ணீருக்குள் நின்றபடி, “என் வாழ்க்கை இப்போ முடிஞ்சுடுச்சு. என்ன சாப்பிடுவாங்க என் பசங்கள்? எனக்கு கொஞ்சம் சோறு இருந்தாலும், அவங்களுக்கே கொடுக்கணும். என்னை வாழ விடாதீங்க… என்னை விடுங்க… எனக்கு வாழத்தெரியல” என தொடர்ந்து துயரத்தை வெளிப்படுத்துகிறார்.
‘सब बह गया, मैं जी कर क्या करूं…’
महाराष्ट्र के लातूर जिले से एक वीडियो सामने आया है जिसमें बाढ़ में फसल बर्बाद होने से एक किसान आत्महत्या करने की जिद करता नजर आ रहा है. वायरल वीडियो में किसान पानी भरे खेत में बिलख रहा है. वो कह रहा है, “सब बह गया, मुझे मर जाने दो, जी कर क्या… pic.twitter.com/ddPpxOnaLd
— NDTV India (@ndtvindia) August 30, 2025
“>
இவரைத் தடுத்து நிறுத்த ஒரு இளைஞர் ஒருவரும் பக்கத்தில் இருந்து ஒருபக்கம் பிடித்து சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனாலும், அந்த விவசாயியின் மனவலி புரிந்த மக்கள் அவரை கண்ணீருடன் பார்த்துவிட்டு, அரசாங்கம் கூட இவனுக்கு உதவி செய்யுமா என்ற நம்பிக்கையையே இழந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது எக்ஸ் மற்றும் பல சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் விவசாயிகளின் நிலைமையை பிரதிபலிப்பதுடன், இயற்கை பேரழிவுகள் எவ்வளவு பெரும் மன அழுத்தத்தையும் வாழ்வழிக்கும் நெருக்கடிகளையும் உருவாக்குகிறது என்பதையும் காட்டுகிறது.
“அரசாங்கம் என்ன கொடுப்பது? என் பசங்க என்ன சாப்பிடுவாங்க?” என கூச்சலிடும் அந்த விவசாயியின் கூச்சல், சமூகத்தில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவருக்கு உடனடியாக அரசு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூகத்தில் எழுந்துள்ளன.
