ராகுல் காந்தியின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய ஆட்சியை பொருத்தவரை மோடி அவர்கள் வேண்டும் என்ற மனநிலை தான் எல்லா இடத்திலும் இருக்கிறது. கேரளா, தமிழ்நாடு என அனைத்து இடங்களிலும் இதை பார்க்கிறோம். புதுடெல்லியை பொறுத்தவரையில் காங்கிரசும் ஆம் ஆத்மி யும் ஒன்றாக நிற்கிறார்கள். இதே டெல்லியை தாண்டி பஞ்சாப் சென்றால் தனித்தனியாக நிற்கிறார்கள். இங்கு அவர்களுடைய பிரச்சாரம் காங்கிரஸ்-க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கே மாற்றி பேசுகிறார்கள். இந்த மாநிலத்தில் நண்பர்களாகவும் பக்கத்து மாநிலத்தில் எதிரிகளாகவும் பிரச்சாரம் செய்வதால் மக்கள் சிரிக்கிறார்கள்.

அதை எல்லாரும் டிவி , சோஷியல் மீடியாவில் காண்கிறார்கள். பஞ்சாப் சென்றால் ஆம் ஆத்மி காங்கிரஸ் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி ஆதரித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. இவையெல்லாம் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அதனால் நமது எதிராளியை பொருத்தவரையில் எதற்காக நிற்கின்றோம் என்பது தெரியாமல் ஆம் ஆத்மி யும் காங்கிரசும் டெல்லியில் ஒன்றாக நின்று கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சினையை பார்த்திருப்பீர்கள் புது டெல்லியை பொருத்தவரையில் எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் எல்லா மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என பேசியுள்ளார்.