
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா சென்ற நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக நேற்று இரவு சென்னை வந்தார்.