இந்தியாவில் மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பயனுள்ளதாக இருக்க பி எஃப் மற்றும் எல்ஐசி பாலிசி தேவைப்படுகிறது. இந்த இரண்டும் EPF பங்களிப்புகள் ஓய்வூதிய கார்பைசை உருவாக்குவதற்காக தான். எல்ஐசி பாலிசிகள் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை என இரட்டை பலன்களை தருகிறது. இந்த நிலையில் LIC பிரிமியங்களை செலுத்த முடியவில்லை என்றால் PF சேமிப்பை நம்பி இருக்கலாம். இதற்கு எல்ஐசி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும்.

அதற்கு முதலில் அருகில் உள்ள EPFO அலுவலகத்தில் படிவம் 14 சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பிஎப் கணக்கை பயன்படுத்தி எல் ஐ சி பிரீமியங்களை செலுத்த அனுமதிக்குமாறு EPF ஆணையரிடம் கேட்க வேண்டும். அதேசமயம் படிவம் 14 சமர்ப்பிக்கும் போது பி எஃப் கணக்குகளில் உள்ள நிதி வருடாந்திர எல்ஐசி பிரிமியம் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.