நடிகர் தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அபிநய்.  இந்த படத்திற்கு பிறகு ஜங்ஷன், தாஸ், ஆறுமுகம் என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் அவருக்கு ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதன் காரணமாக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது கல்லீரலில் லிவர் சிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடும் தனக்கு மேல் சிகிச்சைக்கு ரூபாய் 28 லட்சம் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.