வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2026 மோதலில், ஸ்ரேயாஸ் ஐயர் எல்லைக்கோட்டுக்கு அருகே சுமார் 6 அடி உயரத்திற்கு காற்றில் பாய்ந்து பிடித்த ‘ரிலே’ கேட்ச் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திகைக்க வைத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா அடித்த பந்து சிக்ஸருக்குச் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சிறுத்தை போல் பாய்ந்த ஐயர், பந்தை லாவகமாகப் பிடித்து எல்லைக்கோட்டிற்குள் நின்றிருந்த சேவியர் பார்ட்லெட்டிடம் வீசினார்.
இந்த அதிரடி மாற்றத்தைக் கண்ட டக்அவுட்டில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர், “நிஜமாகவே இது நடந்ததா?” என்பது போல ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Reaction of sky n rohit sharma says what a catch it was ☠️pic.twitter.com/QttTSxcTOX
— Buntyy bagga (@bagga_buntyy) April 17, 2026
“>
மும்பை மண்ணைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தனது சொந்த ஊர் மைதானத்திலேயே காட்டிய இந்த அபாரமான தடகளத் திறமை, எதிரணி வீரர்களையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
