பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்  உர்ஃபி ஜாவேத்.. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை வெளியேற்றப்பட்டார்.  பிரபலமாகலாம் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார் . அதில் நான் 11-ம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய புகைப்படத்தை யாரோ மார்பிங் செய்து தவறான  புகைப்படத்தை பதிவிட்டார்கள்.

இதை பார்த்த குடும்பத்தினர் என் மீது நம்பிக்கை இல்லாமல் தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்தார்கள். இன்னும் என்னை சிலர் தவறாகவே பார்க்கிறார்கள் என்று அழுதுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அவரை இன்னும் பிரபலம் அடைய வைத்தது. இந்த நிலையில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வரும் இவர் தற்போது தலையணை ஆடையோடு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தலையணையை இடுப்பில் சொருகிக்கொண்டு நீலநிறை மேலாடை ஒன்றை அணிந்துள்ளார். இது பார்த்த நெட்டிசன்கள் தலையணையா இது? என்றும் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? என்று கலாய்க்கும் முறையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by IWMBuzz (@iwmbuzz)