
பொதுவாக சேலை கட்டினால் அதை இடுப்பில் சொருகிக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு மத்தியில் சேலையில் கேஷுவலாக ஒர்க்அவுட் செய்யும் பெண்ணின் வீடியோவானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தவகையில் உடற்பயிற்சி ஆர்வலாராக் இருக்கும் ரீனா சிங்க் தினமும் ஒவ்வொரு வண்ண சேலையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவருடைய தனித்துவமே சேலை கட்டிக்கொண்டு ஒர்கவுட் செய்வது தான். ரீனா தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலையில் உடற்பயிற்சி செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த வீடியோவும் அதிகமான லைக்களை பெற்று வருகிறது.
View this post on Instagram