தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் தேர்தல் ஆணையத்தின் மீதுதான் தவறுகள் முன்வைக்கப்படுகிறது என்று கூறினார்.
இதேபோன்று தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலும் சிறப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு இதை எதிர்த்து தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார் என்றார்.
அதன் பிறகு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தால் என்ன தவறு. முதல்வரும் அவரது மகனும் யார் வீட்டு கதவை தட்டினார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு இவ்வளவு கீழ்த்தரமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அவருடைய ஸ்டேட்டஸ் வேறு என்னுடைய ஸ்டேட்டஸ் வேறு என்று கூறினார். மேலும் திமுக ஆட்சியின் குறைகள் குறித்து அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது குறித்து கேள்விக்கு அவர்கள் கொடுத்தால் கொடுக்கட்டும் என்றார்.
