
தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவுக்கும் தாவெகவுக்கும் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறுகிறார். இது எதுகை முனையில் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்சியின் அடிப்படையில் இருந்தே மக்களுக்காக மிக தீவிரமாக போராடி முன்னுக்கு வந்தவர்கள். உங்கள் படத்திற்கு மட்டும் பல மொழிகள் தேவைப்படும் போது பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாமா.? விஜயின் பேச்சில் தெளிவு இல்லை.
எங்களை திமுகவின் பி அணி என்று விஜய் கூறும் நிலையில் நீங்களும் திமுக செல்வதைத்தான் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்களும் திமுகவின் பி அணி தான். பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு பனையூர் மட்டும் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் என்னுடைய வீட்டின் அருகே ஒரு சிறிய வீட்டில் தான் இருந்தீர்கள். உங்களுடைய வாழ்க்கை விரிவடைய பனையூர் தேவைப்படும்போது தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய பரந்தூர் வேண்டாமா.?
மத்திய அரசு தமிழக அரசு கொடுக்கும் இடத்தில் தான் விமான நிலையத்தை அமைக்கும்.பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது என்று விஜய் கூறும் நிலையில் உங்களுக்கு உங்க தயாரிப்பாளரையும் இயக்குனரையும் எதிர்த்து பேசும் தைரியம் இருக்கிறதா.? விஜய் இன்னும் கூட கொஞ்சம் அழுத்தமாகவும் ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். மேலும் செங்கோட்டையன் எதற்காக டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தார் என்பதற்கான காரணம் எனக்கு தெரியாது என்று கூறினார்.