ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் பற்றி அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜு மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். கூவத்தூர் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்த சம்பவம் என நடிகர் திரிஷா மற்றும் கருணாஸ் இருவரையும் தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏவி ராஜு சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு மீண்டும் வீடியோ வெளியிட்டு நான் வேறுவிதமாக சொன்ன கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அது போன்று எந்த விதமான தவறான கருத்தையும் குறிப்பிடவில்லை. அது வேறுமாதிரியாக சித்தரிக்கப்பட்டது. நான் கூறிய கருத்துக்கள் திரிஷா அவர்களையோ, மற்றவர்களையோ புண்படுத்தும்படி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் என்றும் அவர் விளக்கம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், வேண்டுமென்று என் மீது தேவையற்ற ஒரு விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகிய தன்னையும் பற்றி அவதூறு பரப்பக்கூடிய வகையில் முன்னாள் அதிமுக நிர்வாகியான ராஜு ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

எனவே உண்மைக்கு புறம்பான அந்த தகவலை எங்களுடைய நட்பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகார் சென்னை காவல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சார்பிலும் புகார் கொடுக்கப்பட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.