பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜிம் பயிற்சியாளர் கிரண், தனது காதலிக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து மனமுடைந்து நேற்று (பிப். 07) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தனது மரணத்திற்கு காதலியும் அவரது தாயாரும் தான் காரணம் என்று அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.