பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸா மாவட்டத்தில் ஒரு பெண் தனது 8 வயது வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த 8 வயது சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். சிறுமியின் வளர்ப்பு தாயின் வீட்டு அறையில் மர்மமான ஒரு பெட்டி இருந்ததை போலீசார் பார்த்தனர்.
அதனை திறந்த போது உடல் கருகிய நிலையில் காணாமல் போன சிறுமியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் வளர்ப்பு தாயிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. என்னவென்றால் வளர்ப்பு தாய் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று உடலில் தீ வைத்து எரித்துள்ளார். அதன் பிறகு ஒரு சாக்கில் சிறுமியின் உடலை வைத்து பெட்டியில் போட்டு மறைத்து வைத்து நாடகமாடியது தெரியவந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
