
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அமுதா. இவர்களுடைய இரண்டாவது மகளான கவிதாவை வியாசர்பாடி பி.வி காலணியை சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் கவிதா கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதனால் கவிதாவின் தாயார் அமுதா தன்னுடைய மகள் எங்கே என்று கேட்டு மருமகளிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மாமியார் அமுதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அமுதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.