
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது மகள் ஹரிணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிணி மாடியில் இருக்கும் கொடி கம்பத்தில் காய போட்ட துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது உயரத்தில் இருந்த கம்பியில் துணியை எடுக்க முயன்ற போது கால் வழுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.