சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை இளம் நடிகை புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை சந்தோஷ் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நகை பணம் லேப்டாப் ஆகியவற்றை படித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

ஒருநாள் எனது காதலர் சந்தோஷ் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் ஆபாச வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து கேட்ட போது வீட்டுக்குள் புகுந்து சந்தோஷ் என்னை சரமாரியாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அண்ணா நகரில் அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.