தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது.

ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் உன்னுடன் வாழ விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு ஜீவனாம்சம் பெற்று தர வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற பிரியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து போலீசார் பிரியாவை தடுத்து நிறுத்தினர். பின்பு அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌ இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.