இயக்குநர் அமீர் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகியான த்ரிஷா கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக எழுந்தது. இது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, த்ரிஷா மிகவும் நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் பதிலளித்துள்ளார்.
“எனக்கான அழைப்பு கடிதம் (Mail) தபாலில் வரும்போது எங்கோ தொலைந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
த்ரிஷாவின் இந்தப் பதில், அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லையா அல்லது அவர் வேண்டுமென்றே விழாவைத் தவிர்த்தாரா என்ற விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. இருப்பினும், அவரது இந்த நக்கலான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
