விராட் கோலியின் தாய் சரோஜ் கவலைகிடமாக இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கோலி குடும்பத்தினர், “அம்மாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதை கவனித்தோம். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இது போன்ற பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ரசிகர்களும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.