அபுதாபி T10 லீக் போட்டியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த ஒரு காட்சி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இலங்கையைச் சேர்ந்த leg-spinner கேவின் கோத்திகோடா  (Kevin Koththigoda) தனது வித்தியாசமான பந்துவீச்சு  மூலம் ரசிகர்களை குழப்பதிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளார்.

லாஹோர் கலந்தர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டோம் பான்டன், அவரை எதிர்கொள்ளும் போது, எந்த பக்கம் பந்து வரும் என்றே புரியாமல் சற்று குழப்பத்துடன் விலகி நிற்கும் காட்சிகள் தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகின்றன.

காலில் இருந்து தன்னை முற்றிலும் சுருக்கி, பந்தை பின்னால் இருந்து வீசும் இந்த பந்துவீச்சு ஆக்சன் , தென் ஆப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ் பாணியை நினைவூட்டுகிறது.

கேவின் கோத்திகோடே, இலங்கையின் காலிலிருந்து வந்த leg-spinner ஆவார். அவர் மரத்தா அரேபியன்ஸ் அணிக்காக ஆடியபோது, தனது பொதுமக்களால் எதிர்பார்க்க முடியாத பந்துவீச்சு வடிவத்தை கொண்டு டோம் பான்டனுக்கு எதிராக பந்துவீசினார். இந்தியாவின் சிவில் கவுஷிக் போன்றே இவருடைய ஆக்சனும் ரசிகர்களிடையே தனி கவனத்தை பெற்றுள்ளது.

இவரது பந்துவீச்சு ஆக்சன், பார்ப்பதற்கு மிகவும் ‘அசாதாரணமானது’. ஆனால் அதில் பந்தை கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு முன் பதிவான இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி, ரசிகர்களிடையே “இந்த க்கு Batsman-ஐ எதிர்பார்ப்பே இருக்காது!” என கலகலப்பான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.