சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் சரவண குருநாதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சரவண குருநாதன் தினமும் கிண்டியில் இருந்து பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பூந்தமல்லி செல்லும் பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து சரவண குருநாதன் கிண்டியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அதன் பிறகு பூந்தமல்லி செல்வதற்காக 101-ஆம் எண் பேருந்தில் ஏற முயற்சி செய்தார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் சரவண குருநாதன் அங்கிருந்த டைம் கீப்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த டைம் கீப்பர் நடத்துனர், ஓட்டுனர் ஆகியோருடன் இணைந்து சரவண குருநாதனை சரமாரியாக தாக்கி காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.