சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கு பட்டப்பெயர்கள் வேண்டாம் தவிர்த்து விடுங்கள், நான் சின்னவர் தான் உங்களை விட வயதில் அனுபவத்தில், எனவே சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்டப்பெயர் வேண்டாம், தவிர்த்து விடுங்கள் என்று கூறினார். மேலும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அடிமைகளை துரத்தி வீட்டுக்கு அனுப்பினோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம் என்று உதயநிதி கூறியுள்ளார்