
தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்க முடியும் என்று கூறிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் என்றென்றும் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் பின்பற்றப்படும் என்றும் ஒருபோதும் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் பாஜகவினர் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு ஆதரவு கொடுப்பதால் அவரை இந்தி இசை என்று விமர்சிக்கிறார்கள்.
இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சென்னையில் தொடர்ந்து கொலை நடக்கிறது. இது தலைநகரமா இல்ல கொலை நகரமா? தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தமிழ் மொழிக்காக என்ன செய்தார்கள். தமிழ் மொழி பாடத்தில் மட்டும் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்ததாக கூறுகிறார்கள். நான் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதால் என்னை இந்தி இசை என்று கூறுகிறார்கள். தொடர்ந்து அப்படி என்னை கூப்பிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று ஆவேசமாக கூறினார். மேலும் என்னை இந்தி இசை என்று எனை கூற வேண்டாம் என்றும் கூறினார்.