பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவரின் டீப் ஃபேக் நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதுகுறித்து அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை உண்டு. இதுபோன்ற விஷயம் இனி எந்தப் பெண்களுக்கும் நடக்கக் கூடாது,என்று கூறியுள்ளார். என பதிவிட்டுள்ளார்.