அசாமின் தலைநகர் குவாஹத்தியில், பிரபல பாடகர் ஜூபின் கார்க் திடீர் மரண செய்தி வெளியாகியதும், அவரது தீவிர ரசிகரொருவர் அதிர்ச்சியால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், சராகட் பாலத்தில் இருந்து பிரமபுத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் மறைவால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த இளைஞர், தனது உடைகளை கிழித்து, கண்ணீருடன் அலறிக்கொண்டு பாலத்தின் மீது ஏறி நதிக்குள் குதித்ததாக கூறப்படுகிறது. அந்தநேரம் அருகில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் கடும் முயற்சியின் பின்னர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார் என்றும், உடல்நிலை மேம்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்திற்கு பின்னணி, பாடகர் சுபின் கார்க் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட திடீர் விபத்தால் உயிரிழந்ததுதான். அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்ற நிலையில், இசையமைப்பாளர் ஷேகர் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு, அரசு சார்பில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.