
ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதாவது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு நாளுக்கு 993 முட்டை பப்ஸ் வாங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பப்ஸ் ன் விலை வருடத்திற்கு ரூ 72 லட்சத்திற்கு மேல் செல்கிறது.
இந்நிலையில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகம் இந்த முட்டை பப்ஸ்க்கு 3.62 கோடி செலவு செய்துள்ளது. இதனை சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கண்டுபிடித்தது . இதைத்தொடர்ந்து 2019 முதல் 2024 வரை ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தபோது தோல்வி அடைந்தது. இதனால் ஜெகன் ஆட்சியை இழந்தார்.
இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் நோக்கத்தோடு இதனை செய்துள்ளார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருக்கிறார். மேலும் முதல்வர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.