சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. ஆனால், ஐபிஎல் நட்சத்திரங்கள் மைதானத்தில் செய்யும் சேட்டைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு சுவாரஸ்யமான வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
அந்த வீடியோவில், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களான ஜிதேஷ் சர்மாவும், ஜேக்கப் பெத்தேலும் தரையில் அமர்ந்து ஜாலியாக ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். நாம் சிறுவயதில் விளையாடும் ‘கிளி பறக்குது.. மைனா பறக்குது’ (தோத்தா கையில் அடி விழும் விளையாட்டு) கேமைத்தான் இவர்கள் இருவரும் மிகத் தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
What are jitesh Sharma and Jacob bethell doing ?? 😭🤣 pic.twitter.com/y1ksG7ZyBA
— PRATHAM_18 (@unclekohli) April 10, 2026
@unclekohli என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் ரசித்துப் பார்த்து வருகின்றனர். “பெத்தேலும் ஜிதேஷும் என்ன செய்கிறார்கள்?” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் இன்னும் ஒரு குழந்தைத்தனம் மிச்சமிருப்பதை அழகாகக் காட்டுகிறது. முக்கியமான போட்டிக்கு முன்பாக வீரர்கள் தங்களை இப்படி ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
